விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழன்

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழன்

சென்னை:

தமிழகத்தை சேர்ந்த சண்முக சுப்பிரமணியனின் தகவலின் பேரில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய ‘சந்திராயன் 2’ விலிருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் கடைசி 3 நிமிடங்களில் காணாமல் போனது. இதனையடுத்து, நாசாவின் உதவியுடன் இஸ்ரோ விக்ரம் லேண்டரை தேடி வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் காணாமல் போன விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்திருப்பாதகவும், மதுரையை சேர்ந்த இளைஞர் சண்முக சுப்பிரமணியன் தகவலின் பேரில் கண்டறியப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

சண்முக சுப்பிரமணியன் மதுரையை பூர்வீகமாகக்கொண்டவர். சென்¬னையில் லினக்ஸ் இந்தியா டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்