2ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர் விஜயின் மகன்

  • In Cinema
  • June 7, 2020
  • 180 Views
2ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர் விஜயின் மகன்

தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இளைய தளபதி விஜய்யின் மகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கோகுல் இயக்கிய இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரும் புகழ் கிடைத்தது. அதன்பிறகு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்தப்படத்தின் வசனங்கள் அனைத்தும் இன்றும் ஹிட்டடித்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக தளபதி விஜய்யின் மகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதியும் இதுகுறித்து விஜயிடம் பேச அவரும் ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. சம்பளம் குறித்து கேட்டதற்கு முதலில் படம் ஹிட்டாகட்டும் அதன் பிறகு சம்பளம் பற்றி பேசலாம் என்று விஜய் கூறியதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்