அமெரிக்காவில் நுழைய தடை

  • In General
  • February 15, 2020
  • 439 Views
அமெரிக்காவில் நுழைய தடை

வாஷிங்டன்:

இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவில் நுழைய தடை விதித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிப்போரில், தற்போது ராணுவத் தளபதியாக உள்ள சவேந்திர சில்வா, 58வது பிரிவு தலைமை ஏற்றவர். அப்போது ஒரு மாதத்தில் 45,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரின்போது ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களான குடிநீர், உணவு, மருந்துகள் ஆகியவைகளை கொண்டுசெல்ல சவேந்தி சில்வா தடுத்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.

இலங்கை ராணுவத்தளபதியான சவேந்திர சில்வா, அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், இவர் மீதான குற்ற ச்சாட்டு ஐ.நா.,விலும், பல்வேறு அமைப்புகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட் டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை அரசு, எங்கள் நாட்டு ராணுவ தளபதி மீதான வெளியான தகவல்களை பரிசலீக்காமல் தடை விதித்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்