உத்தரபிரதேசத்தில் இன்று முதல் 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்!

உத்தரபிரதேசத்தில் இன்று முதல் 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்!

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உத்தரபிரதேசத்தில் இன்று (வெள்ளி) இரவு 10 மணி முதல் ஜூலை 12ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை சுமார் 55 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆரம்ப காலகட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த பல மாநிலங்களில் தற்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசமும் மாறியுள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை அங்கு கொரோனவால் 31,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 845 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை சுமார் 55 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய மற்றும் வேறு சில சேவைகளைத் தவிர, மற்ற அனைத்தும் மாநிலத்தில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்பு போலவே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருக்கும் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி, ரயில் போக்குவரத்து தொடரும். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகளை இயக்க உத்தரபிரதேச சாலை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்யும், அதேபோல் விமான சேவைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களும் சந்தைகளும் 55 மணி நேரங்கள் இயங்காது எனவும், பயணிகளை ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர மற்ற பேருந்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வெளியேறுவதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியை மேற்கொள்வார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்