நம்பிக்கை வாக்கெடுப்பு: உத்தவ் தாக்கரே வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பு: உத்தவ் தாக்கரே வெற்றி

மும்பை:

மகாராஷ்டிரா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றிபெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது.

இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 169 வாக்குகள் பதிவானதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்