டிரண்டாகும் #தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்..!

டிரண்டாகும் #தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்..!

சென்னை:

சமூகவலைத்தளங்களில் நெட்டீசன்களலால் #தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் என தற்போது டிரண்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.

எதற்காக இந்த டிரண்டிங்?

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில், ஊடகங்கள் அனைத்தும் பிக்பாஸ் பற்றியும், தென்னிந்திய திரைப்பட சங்கம் பற்றியும் செய்தி வெளியிட்டு வருவதை கண்டித்து இந்த ‘#தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்’ ஹாஸ்ட் டேக்குகள் மூலம் தங்களது எதிர்ப்புகளை நெட்டீசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஹாஸ்டேக் பதிவுகளில் கார்ட்டூன்களை வெளியிட்டும், சில பேர் ராஜராஜ சோழன் பற்றியும் தெரிவித்தும், நடிகர் சங்கத்தேர்தலை செய்தியாக வெளியிடுவதை விட மழை நீர் சேகரிப்பு குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றும், நாட்டில் எவ்வளவோ நல்ல செயல்கள், அதாவது ஏரியை தூர்வாறுதல், சமூக சேவை உள்ளிட்டவைகளை ஊக்குவித்து செய்தி வெளியிடலாமே என தங்களது எதிர்ப்புகளை நெட்டீசன்கள் வலுப்பெற செய்துள்ளனர்.

இந்த ஹாஸ்டேக் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்