சசிகலா விடுதலை.. தினகரனுக்கு விருப்பம் இல்லை

சசிகலா விடுதலை.. தினகரனுக்கு விருப்பம் இல்லை

திருவாரூர்:
பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வராமல் இருப்பதே நல்லது என்று டி.டி.வி.தினகரனின் விருப்பம் என்று அவரது தாய்மாமா திவாகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா.

இந்நிலையில் அவர் சிறைக்கு சென்ற நாள் முதல் அவரது குடும்பத்தில் தினமும் குழப்பங்களும், மோதல்களும் இருக்கின்றன.

அக்கா சசிகலாவிடம் தன்னை பற்றி டிடிவி தினகரன் தவறான தகவலை கூறிவிட்டார் என்பது திவாகரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு.

தொடக்கத்தில் தினகரனோடு இணைந்து செயல்பட்ட திவாகரன், ஒரு கட்டத்தில் பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார்.

அண்ணா திராவிடர் கழகம் என்ற அந்தக் கட்சிக்கு தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.

இதனிடையே மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், முதலீடுகளை ஈர்க்க செல்வதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஜாலி டூர் அடித்து திரும்பியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க தினகரன் தடையாக உள்ளார் என்றும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தினகரனின் செல்வாக்கு என்ன என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும், சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்