போக்குவரத்து விதிமீறல்: ரூ.6.5 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமீறல்: ரூ.6.5 லட்சம் அபராதம்

சம்பல்பூர்:

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நாகாலந்தை சேர்ந்த லாரிக்கு ரூ.6.5 லட்சம் அபராதத்தை ஓடிஷா போக்குவரத்து துறை விதித்துள்ளது.

கடந்த 10ம் தேதி சம்பல்பூரில் நடந்த சோதனையில், லாரி ஒன்றுக்கு ரூ.6,53,100 அபராதத்தை ஓடிஷா போக்குவரத்து துறை விதித்துள்ளது.

நாகாலந்தை சேர்ந்த சைலேஷ் சங்கர் லால் குப்தா என்பவர். தன்னுடைய சரக்கு லாரிக்கு கடந்த 21.7.2014 முதல் தற்போது வரை வரியே கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் இன்சூரன்ஸ், பர்மிட், போக்குவரத்து விதி மீறல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக கீழ்கண்டவாறு ஒடிஷா போக்குவரத்துத்துறை அபராதம் விதித்துள்ளது.

பொது குற்றத்திற்கு ரூ.100, உத்தரவை மதிக்க தவறியதற்கு ரூ.500, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரூ.1000, ஆட்களை லாரியில் ஏற்றுதல் ரூ.5000, பர்மிட் இல்லாததற்கு ரூ.5000, இன்சூரன்ஸ் இல்லாதற்கு ரூ.1000 மற்றும் 5 வருடமாக வரி கட்டாததற்கு ரூ.6,40,500 என ரூ.6,53,100 அபராதமாக ஒடிசா போக்குவரத்து துறை விதித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்