சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், பசுமை வீடு திட்டத்துக்கு வீடு ஒன்றுக்குரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவரம்:
புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை நிறுவதற்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி
கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
தொழில் துறைக்கு ரூ.2500 கோடி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
ஜவுளி துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி
மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 கோடி
தமிழகத்தின் 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் தெ £டங்கப்படும்.
ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புகளுக்கு ரூ.5.500 கோடி
சென்னை சுற்றுவட்டச்சாடை திட்டத்துக்கு ரூ.12,301 கோடி
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.15,850 கோடி
நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமிர £க்கள் பொருத்தப்படும்.
போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி
எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி
பள்ளிகளில் மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி
உயர்கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி
முதல்வரின் பசுமை வீடு திட்டம்; வீடு ஒன்றுக்கு ட்டுமான செலவு ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்படும்.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி
கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி
பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1360 கோடி
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி
தமிழக காவல் துறைக்கு ரூ.8,876 கோடி
தீயணைப்பு துறைக்கு ரூ.405 கோடி
மத்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 179 திட்டங்கள் சேர்ப்பு
வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்க முக்கியத்துவம் அளித்துள்ளது.
கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனை திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒது க்கீடு.
சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி
சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,403 கோடி
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
நிதி நிர்வாகத்திற்காக ரூ.1,403 கோடி
புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ.550 கோடி
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி