டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்’ – தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்’ – தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (Central Teacher Eligibility Test- CTET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், இனி ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (‘National Council For Teacher Education’- NCTE) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டெட் தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றோருக்கும், இனி தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கும் வழங்கப்படும் சான்றிதழ், ஆயுள்காலம் வரை செல்லும். புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன், சட்ட ஆலோசனை நடத்தப்படும். இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும்’ என விதி திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதி அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

80,000 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, சான்றிதழை நீட்டிக்கக்கோரி வலியுறுத்தி வந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்