உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு

உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி:

உள்ளாட்சி தேர்தல் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ள நிலையில், தமிழக அரசு பதில் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். விதிகளுக்கு உட்பட்டு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என திமுக கூட்டணி சார்பாக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தவறான தகவலை அளித்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்