காய்ச்சல், சளி மாத்திரை விற்றால் கடை உரிமம் ரத்து என எச்சரிக்கை

காய்ச்சல், சளி மாத்திரை விற்றால் கடை உரிமம் ரத்து என எச்சரிக்கை

மளிகை கடையில், காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கான மாத்திரை விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.சென்னையில், தொற்று பாதித்தவர்களை கண்டறியும் வகையில், மருந்து கடைகளுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மருத்துவர் சீட்டு இல்லாமல், காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்து வழங்கக்கூடாது; யாராவது, மருந்து கேட்டால், அவர்கள், பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விபரங்களை சேகரிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.ஆனால், பல மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில், காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கு, ‘குரோசின், விக்ஸ் ஆக் ஷன் 500, சாரிடான்’ போன்ற மருந்துகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.இதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்தால், மாத்திரைகளை பறிமுதல் செய்து, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள், உரிமையாளர்களை எச்சரித்து வருகின்றனர்.மேலும், ‘காய்ச்சல், சளிக்கு மாத்திரை கேட்டால், அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்’ என, அதிகாரிகள் வலியுறுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்