ஆசிரியர் இடமாற்றம்; மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

ஆசிரியர் இடமாற்றம்; மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

ஒசூர்:

ஒசூர் அருகே அரசு பள்ளி வளர்ச்சிக்காக உழைத்த ஆசிரியை பணியிட மாற்றம் செய்ததால், இரு நாட்களாக பள்ளி புறக்கணிப்பில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபணப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய ந டுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

2015 ஆம் ஆண்டு பள்ளிக்கு இடமாறுதல் பெற்று பார்வதி என்பவர் தலைமைய £சிரியராக வந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுமே இருந்தநிலையில், தலைமை ஆசிரியையின் முயற்சியாலும், கற்பித்ததை அறிந்து தனியார் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியரும் அரசுப்பள்ளிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.

15 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 48 மாணவர்களாக உயர்ந்தி மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக மாறிபோனவர் தற்போது அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பள்ளியில் இருந்த தலைமை ஆசிரியர் கோபணப்பள்ளி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டார்.

இதனை ஏற்காத கோபணப்பள்ளி பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் அதே தலைமை ஆசிரியை பள்ளியில் பணியமர்த்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையில் இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை ஆசிரியைக்காக மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்