4 மணி நேரம் ஆம்புலன்சில் கிடந்த உடல்

4 மணி நேரம் ஆம்புலன்சில் கிடந்த உடல்

ஒசூர்:

ஓசூர் அருகே பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி பலியானார். மாணவியின் உடல் சுமார் 4 மணி நேரம் ஆம்புலன்சிலேயே கிடந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டிநாயக்கன்ஹள்ளியை சேர்ந்த சுதா மற்றும் அவரின் கணவர் அணிச்சந்தர் இருவரும்,ஓசூர் – பாகலூர் சாலையில் உள்ள விஸ்வநாதன்புரம் பகுதியில் ரஹ்மத் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கியிருந்து கொய்யா மரங்களை பராமரிக்கும் பணி செய்து வருகின்றனர்.

இவர்களின் 12 வயது மகள் காவியா தர்மபுரி விடுதியில் தங்கி பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தன் பெற்றோருடன் இருந்த காவியா அப்பகுதியில் உள்ள கொய்யா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, தண்ணீர் குட்டையின் கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தன்னுடைய பெற்றோர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காவியா உயிரிழந்த இடம் ஓசூர் பாகலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டதா? அல்லது ஓசூர் ஆட்கோ காவல் நிலையத்துக்கு உட்பட்டதா? என்று இரு பகுதி போலீசாருக்கும் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டதால் சுமார் 4 மணி நேரமாக பள்ளி மாணவி காவியாவின் உடலை உடல்கூறு ஆய்வு அறையில் வைக்க முடியாமல் ஆம்புலன்சில் கிடந்த சம்பவம் ஏற்கனவே மகளை இழந்து வருத்தத்தில் இருந்த பள்ளி மாணவி காவியாவின் பெற்றோரை மேலும் வருத்தமடையச் செய்தது.

இது குறித்து தகவலறிந்த ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி உடனடியாக மாணவி காவியாவின் உடலை உடல்கூறு ஆய்வகத்தின் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருந்த போதிலும் பாகலூர் மற்றும் ஓசூர் ஆட்கோ போலீசாரின் எல்லை பிரச்சனையால் 4 மணி நேரமாக பள்ளி மாணவியின் உடல் பிண அறையில் வைக்க முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கிடந்த சம்பவம் முகம் சுளிக்க வைத்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்