ஸ்ரீநகர் -பாராமுல்லா நாளை முதல் ரயில் சேவை

ஸ்ரீநகர் -பாராமுல்லா நாளை முதல் ரயில் சேவை

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரிலிருந்து பாராமுல்லாவிற்கு நாளை முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாளை (12.11.19) ரயில் எண் 74619 ஸ்ரீநகரிலிருந்து காலை 10.05க்கு புறப்பட்டு காலை 11.45 மணிக்கு பாராமுல்லாவிற்கு சென்றடையும்.

மறு மார்கமாக ரயில் எண் 74618 பாராமுல்லாவிலிருந்து காலை 11.55க்கு புறப்பட்டு, பிற்பகல் 1.40க்கு ஸ்ரீநகர் சென்றடையும்.

அதேபோல், ரயில் எண் 74637 காலை 11.10க்கு ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டு, பகல் 12.55க்கு பாராமுல்லா சென்றடையும்.

மறுமார்கமாக ரயில் எண் 74640 பிற்பகல் 1.05க்கு பாராமுல்லாவிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.45க்கு ஸ்ரீநகர் வந்தடையும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்