ஸ்ரீநகர் சென்ற சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தம்

ஸ்ரீநகர் சென்ற சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தம்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் கட்சியினரை சந்திக்கச் சென்ற மா.கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370ஐ மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

ரத்து அறிவிப்புக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தனது கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த ஜம்மு காஷ்மீர் சென்றார். ஆனால், அவரை விமான நிலையத்திலேயே ராணுவம் தடுத்து நிறுத்தியது. குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் சென்றால் பிரச்சனை வெடிக்கு அபாயம் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்திக்க இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்மளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்