மண்ணை ஜலித்து மணல்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மண்ணை ஜலித்து மணல்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஒசூர்:

ஓசூர் அருகே சட்டவிரோதமாக பட்டபகலில் மண்ணை சலித்து மணலாக்கும் பணிகள் படுஜோராக நடைபெற்று வருவதை போலீசாரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல்நிலையத்திற்குட்பட்ட திராடி என்னும் கிராமத்தை சுற்றி தனியார் சார்பில் மண்ணை மணலாக சளிக்கும் பணிகள் எந்த தடையுமின்றி விறுவிறுவாக நடைப்பெற்று வருகிறது.

நிலத்தடிநீர் நீர்மட்டத்தை உயர்த்தவும், நீரை சேமிக்கவும் மணலின் தேவை இன்றியமையாதது, கட்டுமான பணிகளுக்கும் மணல் தேவை என்பதால் நீர்நிலைகளில் மணலை எடுத்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு தமிழக அரசு மணல் அள்ள தடைவிதித்தது.

தடையை மீறி சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து கர்நாடகவிற்கு மணல் கடத்தப்பட்டு வந்ததை தடுக்கும் வகையில் தமிழக அரசு மணல் கடத்துவோரை குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்த அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் மணலை அள்ள முடியாத சமூக விரோதிகள் வருவாய்த்துறையினரின் பேராதரவுடன் குடிமராமத்து உள்ளிட்ட பணிகள் செய்வதாக ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண் விவசாய நிலத்தில் கொட்டப்படாமல் நேரடியாக தனியார் நிலத்தில் கொட்டப்படுகிறது.

பின்பு நீரினை கொண்டு மண்ணை சலித்து, சுத்த மணலாக பிரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் மணலை ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு தங்குதடையின்றி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

சூளகிரி அடுத்த திராடி பகுதியில் மட்டுமல்லாமல் சுற்று கிராம பகுதிகளிலும் எந்த பயமோ பதட்டமோ இல்லாமல் தனியார் நிலத்தில் மணல் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெறுவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள்.

வருவாய்த்துறை,காவல்துறையினருக்கு மாதந்தோறும் மணல் கடத்தல்காரர்கள் வெயிட்டாக கவனித்துக்கொள்வதால் மண்ணை அள்ள வருவாய்த்துறையினரும், மணலை விற்க போலிசாரும் பச்சைக்கொடி காட்டி பேராதரவை நல்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்