பா.ஜ.,வில் இணையவில்லை: சச்சின் பைலட்

பா.ஜ.,வில் இணையவில்லை: சச்சின் பைலட்

பா.ஜ., தலைவர் நட்டாவை, ராஜஸ்தான் துணை முதல்வர், சச்சின் பைலட் இன்று சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. ஆனால், தான் பா.ஜ.,வில் இணையபோவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். இருவருக்கும் இடையே மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கூட இருவரும் இணைந்து செயல்படவில்லை. ராஜஸ்தான் அரசியலில் சில நாட்கள் அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் பூசல் வெடித்துள்ளது. ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., முயற்சிப்பதாக முதல்வர் கெலாட் குற்றஞ்சாட்டினார். ஆனால், பா.ஜ., இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட், 30 எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சச்சின் பைலட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:எனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது.ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது. ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் நானும், என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார்.ஆனால், ராஜஸ்தானில் தங்களிடம் பெரும்பான்மைக்கு தேவையான 101 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளதாகவும், 16 எம்.எல்.ஏ.,க்கள் தான் பைலட் வசம் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், டில்லி சென்றுள்ள சச்சின் பைலட், பா.ஜ.,வில் இணையலாம் எனவும், பா.ஜ., தலைவர் நட்டாவை சந்திக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்துள்ள சச்சின் பைலட், தான் பா.ஜ.,வில் இணைய போவதில்லை என தெரிவித்துள்ளார் .97 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்புராஜஸ்தானில் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 200 ஆகும். அதில் மெஜாரிட்டிக்கு 101 பேர் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு 107 எம்.எல்.ஏ.,க்களும், 10 சுயேட்சை ஆதரவு அளிக்கின்றனர்.

பா.ஜ.,விற்கு 73 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் கூட்டிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் 97 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 16 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.எங்களிடம் பேசுங்கஇதனிடையே, ராஜஸ்தான் விவகாரத்தை கவனிக்க கட்சி மேலிடத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ரன்தீப் சுர்ஜிவாலா, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினருக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும், எங்களிடம் பேசுங்கள். பிரச்னையை தீர்ப்பதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. சச்சின் பைலட்டுடன், சோனியாவும், ராகுலும் தொடர்பில் உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்