சச்சின் டெண்டுல்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

  • In Sports
  • June 17, 2020
  • 183 Views
சச்சின் டெண்டுல்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 49 சதங்களையும் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்களை அடித்த முதல் வீரரும் ஒரே வீரரும் என்ற சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய கிரிக்கெட் பயணத்தில் இருந்து குறிப்பிட்ட சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

1) சச்சின் டெண்டுல்கரை முதன் முதலாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விக்கெட்டை எடுத்தவர் வாகர் யூனில். அதே நேரம் டி 20 போட்டியில் விக்கெட்டை எடுத்தவர் சார்ல் லாங்வெல்ட். சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு சர்வதேச டி 20 போட்டியில் தான் விளையாடி உள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அந்த போட்டியில் 10 ரன்கள் அடித்தார் சச்சின் டெண்டுல்கர்.) சச்சின் டெண்டுல்கர் அணியில் இருந்து இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் 20இல் வெற்றி பெற்றுள்ளது. அந்த 20 போட்டிகளில் 2 இல் மட்டுமே சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணிலும், 2010 ஆம் ஆண்டு வங்கதேச மண்ணிலும் விருதை வென்றார்.

3) சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை (7 சதங்கள்) ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் அடித்துள்ளார். சென்னையின் சேப்பாக் மைதானம், இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மற்றும் எஸ்எஸ்சி மைதானத்தில் தலா 5 சதங்களை அடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் 18,426 ரன்களை அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
4) முதல் தர கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக 1988 ஆம் ஆண்டு லால்சந்த் ராஜ்புத் தலைமையில் குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர். அந்தப் போட்டியில் 100 ரன்கள் அடித்தார்.

5) சச்சின் டெண்டுல்கர் 15 அணிகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் பந்துவீசியுள்ளார். அதில் நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிராக மட்டுமே அவர் விக்கெட் எடுக்கவில்லை.

6) ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரை 2 வீரர்கள் மட்டுமே 1 முறைக்கு மேல் அவுட் செய்துள்ளனர். ஒருவர் கிளேன் மெக்ரா, மற்றொருவர் சனத் ஜெயசூர்யா. சனத் ஜெயசூர்யா 1996, 1999 உலகக்கோப்பை தொடரில் சச்சினை அவுட் செய்தார்.

7) 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்டின் போது டெஸ்டில் 11,953 ரன்களை அடித்து அப்போது பிரையன் லாரா வைத்திருத்த அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசமாக்கினார். அவர் சாதனை படைக்கும் போது பந்துவீசியவர் பீட்டர் சிடில்.

ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.
8) சச்சின் டெண்டுல்கர் பந்துவீசி அதிகமுறை பாகிஸ்தான் அணியின் இன்ஜமாம்-உல்-ஹாக் விக்கெட்டை எடுத்துள்ளார், 8 முறை. இதேபோல் பிரையன் லாரா, மொயின் கான், ஸ்டீவ் வாக் ஆகியோரை 4 முறை அவுட்டாக்கி உள்ளார்.

9) சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் கடைசியாக விக்கெட்டை இழக்கும் போது, அவருடன் ஜோடிசேர்ந்து விளையாடிவர் புஜாரா. 2013 நவம்பர் மாதம் நடைபெற்ற அந்தப் போட்டியில் சச்சின் 74 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் புஜாரா 113 ரன்கள் அடித்தார். இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

10) ஒரு நாள் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். அவர் 1999 ஆம் ஆண்டில் 34 போட்டிகளில் விளையாடி 1894 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 143 ரன்களை அடித்தார். அந்த ஆண்டில் மட்டும் 9 சதங்களையும், 7 அரை சதங்களையும் அடித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்