வழிப்பாதை ஆக்கிரமிப்பு; போலீசார் பேச்சுவார்த்தை

வழிப்பாதை ஆக்கிரமிப்பு; போலீசார் பேச்சுவார்த்தை

ஒசூர்:

ஒசூர் அருகே வழிபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை காலி இடித்து வழிபாதை அமைக்க போலீசார் பாதுகாப்புடன் நில அளவை பணிகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் போடிச்சிப்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த 50 குடும்பங்கள்
சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

அந்த பகுதிக்கு செல்லும் பாதையில் வேறு இனத்தவர் வீடு கட்டிக் கொண்டு அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வழி விட்டிருந்தார். தற்போது கடந்த 2 ஆண்டு காலமாக அந்த பாதையை மறைந்து அந்த பகுதி மக்களை அவர்கள்பட்டா நிலப் பாதையில் வரக்கூடாது என தகராரு செய்துவருகிறார்.

இதனால் அங்கு வசிக்கின்ற குடும்பங்கள் மருத்துமனைக்கு செல்லவோ. இறந்த பிணத்தை எடுத்துச் செல்லவோ,குடிநீர் கொண்டு வரவோ . வாகனங்கள் சென்று வரவோ, முடியாமல் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட சம்மந்த அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததின் விளைவாக புரம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடித்து பாதையை ஏற்படுத்தித் தர வருவாய்த்துறை மூலம் வீடுகளை காலி செய்ய இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக இன்று காவல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில்
கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன், சிறப்பு உதவி ஆய்வ £ளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் க £ர்த்திகேயன், துணை வட்டாச்சியர் சிவப்பா, நில அளவையாளர் ராமன், கிராம நிர்வாக அலுவலர் நல்லதம்பி, ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா ஆஞ்சி பே £ன்றோர் கலந்து கொண்டு இரண்டாவது முறையாக அரசு புரம் போக்கு நிலங்களில் கட்டிய வீடுகளை இடித்து பாதை ஏற்படுத்த நில அளவையின் போது இந்த நில அளவின் போது வரைப்பட பதிவேட்டில் நத்தம் என்றும் அ பதிவேட்டில் புறம்போக்கு என்றும் உள்ளது . தங்கள் உயர் அதிக £ரிகளிடம் ஆலோசனைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்