ரோஜா விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

ரோஜா விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர்:

காதலர் தினத்திற்கான ரோஜா மலர்கள் ஏற்றுமதி விலைக்கே உள்ளூர் ச ந்தையில் விற்க்கப்படுவதால் ஒசூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் குளிர்ந்த சீதோஷன நிலை நிலவுவதால் ரோஜா மலர்கள் உட்பட சுபநிகழ்ச்சி அலங்கார மலர்களும் அதிகஅளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஒசூர்,தளி,சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏ க்கர்களுக்கும் அதிகமாக பசுமைகுடில்கள் மூலம் வண்ண வண்ண, பல வகை ரோஜா மலர்கள் உற்ப்பதி செய்யப்பட்டு துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நா டுகளுக்கும் புதுடெல்லி, ஆந்திரா,கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ரோஜா மலர்கள் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டிகைகளாக கிறிஸ்துமஸ், புத்தாண்டாக இருந்தாலும், காதலர் தினத்திற்காக மட்டுமே அதிகஅளவிலான ஆர்டர் கிடைக்கும் என விவச £யிகள் தெரிவிக்கின்றனர், காதலர் தினத்திற்காக சிகப்பு வண்ண மலர்கள் க £தலின் குறியீடாக இருப்பதால் சந்தையில் அதற்கான தேவை அதிகமாக இருப்பதால் ஒசூர் பகுதி விவசாயிகள் பிப்ரவரி மாதத்தை குறிவைத்து ரோஜா மலரை உற்ப்பதி செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு 1 கோடி மலர்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு ரோஜா மலர்களின் உற்ப்பதி பாதிக்கப்பட்டு 70 லட்சம் மலர்களே காதலர் தினத்திற்காக உற்ப்பதி செய்யப்பட்டிருப்பதாகவும், சீனா நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாட்டின் மலர்கள் ஏற்றுமதி தடையாகி இந்தியாவில் குறிப்பாக ஒசூர் மலர்களுக்கு ச ந்தையில் ஒரு இடம் இருக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்ப்பார்த்திருந்தது.

இந்நிலையில், எத்தியோப்பியோ, கென்யா ஆகிய நாட்டில் உற்ப்பதி செய்யப்பட்ட மலர்களே அதிகஅளவில் ஏற்றுமதியாகி வந்தாலும், ஒரு ரோஜா மலர் ஏற்றுமதியில் 15 ரூபாய்க்கு விற்க்கப்படுவதாகவும், ஆனால் உள்ளூர் சந்தைகளிலேயே ஒரு மலருக்கு 13 ரூபாய்வரை கிடைப்பதால், ஏற்றுமதியில் ஆர்வம் குறைந்து உள்ளூர் சந்தைகளில் மலர்களை விற்பதில் ஒசூர் பகுதி ரோஜா சாகுபடியாளர்கள் அதிகஅளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்றுமதியாகும் விலைக்கே உள்ளூர் சந்தையில் விவசாயிகள் விற்று வருவதால், ரோஜா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்