சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஒசூர்:

ஒசூரில், 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி காவல்துறை சார்பில் நடைப்பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், 31 வது சாலைபாதுகாப்பு வார விழாவையொட்டி ஒசூர் உள்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக நடைபேரணி நடத்தப்பட்டது.

ஒசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தனியார் பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி “தலை க்கவசம் உயிர்க்கவசம்”, “சாலை விதியை நேசி விபத்து வருமா யோசி” உள்ளிட்ட வாசகங்களை முழங்கியவாறு முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறைவுற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்