இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 9’ஆம் தேதி 11 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பியின் பதவிக்காலம் நவம்பர் 25’ஆம் தேதியுடன் காலாவதியாகவுள்ளதால் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.