ரஜினி கட்சி துவங்க வேண்டுகோள்

  • In Cinema
  • December 13, 2019
  • 366 Views
ரஜினி கட்சி துவங்க வேண்டுகோள்

ஒசூர்:

ஒசூரில் ரஜினியின் 70வது பிறந்தநாள் விழாவில், விரைவில் அரசியல் கட்சியை தொடங்க ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் சார்பில் ரஜினியின் 70வது பிறந்தநாளை கொண்டாடினர்.

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட, சின்ன குழந்தையும் சொல்லும்” என்கிற பாடல் வரிக்கேற்ப ரஜினிகாந்தை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.

சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கை தொடங்கிய ரஜினி தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் வரை வளர்ந்திருக்கிறார், உலகம் முழுவதும் சிறியவர்கள் வரை முதியவர்கள் வரை இவருக்கு இரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இவர் அரசியலுக்கு வர வேண்டுமென்பதே ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் வேண்டுகோள், அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார், ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

இதுவரை அரசியல் கட்சியை தொடங்காத நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஜினியின் 70வது பிறந்தநாளான இன்று, ஒசூரில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஒசூர் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் 70 கிலோ கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

மேலும் ரஜினியின் 70 வது பிறந்தநாளில் 1070 மரக்கன்றுகள் ஒசூர் வெங்கடேஷ் நகர் ஏரிக்கரையில் நடப்பட்டது.

பின்பு பேசிய ரஜினி ரசிகர்கள்:

அரசியலுக்கு லேட்டாகவும், லேட்டஸ்டாகவும் வந்திருக்கும் ரஜினி விரைவில் கட்சி தொடங்கி 2021 ல் ஆட்சி பிடித்து தமிழகத்தில் ஆன்மிக அரசியலை செய்ய வேண்டுமென ரஜினிக்கு ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்