ஸ்ரீநகர் புறப்பட்ட ராகுல்

ஸ்ரீநகர் புறப்பட்ட ராகுல்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி குழுவினர் டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ராகுல்காந்திக்கும், அம்மாநில ஆளுநருக்கும் பல்வேறு விமர்சனங்கள் நிகழ்ந்த நிலையில், ஆளுநரின் சத்யபால் மாலிக்கின் எச்சரிக்கையும் மீறி ஜம்மு காஷ்மீரை சுற்றிப்பார்க்க வருவதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ராகுல்காந்தி டெல்லி விமானநிலையத்திலிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றார். உடன் டி.ராஜா, சரத்யாதவ், மஜித் மேமன் மற்றும் மனோஜ் ஷா ஆகிய எதிர்க்கட்சி குழுவினர் ராகுல்காந்தியுடன் உடன் சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்