ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

ஒசூர்:

ஓசூர் அருகே செம்மறி ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்றதால், ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி(52), இவர் 30க்கும் அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

வழக்கம் போல இன்றும், ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

அனைத்து ஆடுகளும் அலறியடித்து ஓடியநிலையில், ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு உடல்முழுவதும் சுற்றியவாறு உடலை நெறுக்கி உள்ளது, ஆட்டினை சுற்றிய மலைப்பாம்பை வெங்கடசாமியால் பிரிக்க முடியாததால் கூச்சலிட்டுள்ளார், சத்தம்கேட்டு அப்பகுதியினர் வருவதற்க்குள்ளாக ஆடு உயிரிழந்ததையடுத்து,

ஜோதிபுரம் கிராமத்தினர் ஓசூர் வனக்கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து வனத்துறையினர் மலைப்பாம்பினை மீட்டு அடர்வனப்பகுதிக்குள் கொண்டுவிட எடுத்து சென்றனர்.

உயிரிழந்த செம்மறிந்த ஆட்டின் மதிப்பு 8 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என ஆட்டின் உரிமையாளர் வெங்கடசாமி தெரிவித்தார். ஆட்டினை மலைப்பாம்பு விழுங்க முயற்சிப்பதாக பரவிய தகவலால் கிராம மக்கள் ஆர்வமுடன் காண குவிந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்