நன்றி மறந்த தமிழர்கள்.. பொன்.ராதா கருத்து சரியா

நன்றி மறந்த தமிழர்கள்.. பொன்.ராதா கருத்து சரியா

சென்னை:
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜக மீனவரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 69 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணனிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து பற்றி கேட்டனர்.

இதற்கு அவர் கூறியதாவது: அமித்ஷாவின் கருத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு இன்னொரு கருத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.

தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த தமிழர்கள் கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? அரபு, கிரேக்க மொழிகளைவிட பழமையானது என்ற வரலாற்று பதிவை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும். கொண்டாடி இருக்க வேண்டும்.

அது தமிழின் கொண்டாட்டம். தமிழர்களின் கொண்டாட்டம். அதை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்களே.

தமிழகத்தில் ஆளும் அதிமுகு அரசு பிரதமரின் அந்த கருத்துக்கு சட்டமன்றத்திலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டாமா?

தமிழ், தமிழர்கள் என்று மாரை தட்டும் திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டாடி இருக்க வேண்டும்.

மேலும், பிரதமருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும் ஏன் செய்யவில்லை.

அத்தனை அரசியல் கட்சிகளும் தமிழர்கள் ஒப்பாரி வைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. சந்தோசப்பட கற்றுக்கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்