சைக்கிள் எடுத்துச்செல்ல அனுமதி

  • In Chennai
  • February 15, 2020
  • 396 Views
சைக்கிள் எடுத்துச்செல்ல அனுமதி

சென்னை:

மெட்ரோ ரயில்களில் பயணிகள் சைக்கிள்களை எடுத்துச்செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

சென்னையில் ஏற்பட்டுவரும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஞாயிற்று கிழமைகளில் சலுகை விலையில் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சேவை மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் வீட்டிலிருந்து எ டுத்துவரப்படும் சைக்கிள்களையும், ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களையும் பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டு செல்லலாம் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கு செல்ல பயணிகளுக்கு செலவு குறைவதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள் சேவைகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்