முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!

  சிங்கப்பூரில் ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறிய கூடிய மூச்சு பரிசோதனை கருவி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தெரிவித்துள்ளது. 180 நோயாளிகளை உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனையில் 90% க்கும் அதிகமான துல்லியமாக கன்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனையை செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது ஆய்வக செயலாக்கம் தேவையில்லை எனவும் தொழில்நுட்பத்தை சரிபார்க்க அடுத்த சில நாட்களில் 600 நோயாளிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  READ MORE
 • கொரோனா தடுப்பூசி தயாரானது

  இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவிற்கான ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் கூறியதாவது. தடுப்பூசி உற்பத்தி

  READ MORE
 • உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி

  ஈரோட்டைச் சேர்ந்த 3‌ வயது குழந்தை, அபார நினைவாற்றலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் ஒப்புவித்து அசத்தி வருகிறார். இதுகுறித்து அந்த குழந்தையின்‌ வீடியோவை சமூக வலைதளத்தில் கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தை ப்ரிவ்யா-வின் நினைவாற்றலை சோதித்தனர். அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை

  READ MORE
 • இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்

  இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் கார்களின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சியாம்’ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பயணிகளின் வாகனங்களின் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

  READ MORE
 • தமிழகத்தில் சூறைகாற்றுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

  சென்னை: தமிழகத்தின் சில இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் அவதிபட்டுவந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  READ MORE
 • கமல் பிரச்சாரத்திற்கு தடை கோரி பெண் மனு!

  கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சூலூரில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான பாலமுருகன், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது உயிரிழந்தார். தன் கட்சியின் தொண்டர் இறந்ததை பற்றி கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தொண்டர்களையே கண்டுகொள்ளாத கமல், மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார் எனவும், சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தடை

  READ MORE
 • தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

  தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஞ்சாலங்குறிச்சி கோவில் திருவிழாவையொட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஞ்சாலங்குறிச்சி, வீர சக்க தேவி ஆலய திருவிழா, ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளதால், அசாம்பாவிதங்கள் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டிடவும், ஏப்ரல் 9ம் தேதி மாலை 6

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு