தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்

தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்

பெங்களூரு:

தினமும் 9 மணி நேரம் தொடர்ந்து தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் மெத்தையின் வேக்பிட் இனோனேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் இயக்குனர் கூறுகையில், வாழ்க்கை மற்றும் வேலையை சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, ஆழ்ந்த தூக்கத்தின் மீது விருப்பமுடையவர்கள் தேவைப்படுவதாகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, படுக்கை ஒன்று அளிக்கப்படும். அதில் பைஜாமா உடய மட்டுமே அணிந்துகொண்டு, 100 நாட்களுக்கு தினமும் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.

இந்த சமயத்தில் லேப்டாப் பயன்படுத்தக்கூடாது எனவும், 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தூங்குவதற்கு முதல் முறையாக சம்பளம் கொடுக்கு இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வைரலாகவும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்