நித்யானந்தா ஆசிரமம் மூடல்

நித்யானந்தா ஆசிரமம் மூடல்

அலகாபாத்:

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம், பல்வேறு புகாரையடுத்து மாவட்ட நிர்வாகத்தால் இன்று மூடப்பட்டது.

குஜராத்தின், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், ; நித்யானந்தாவின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஆசிரமத்தில் உள்ள சிலர் காணவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், ஆசிரமத்தை 3 மாத காலம் மூடவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அலகாபாத் ஆசிரமத்தில் உள்ளவர்கள் பெங்களூரு பிடதி ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்