கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை, வட்டியை முறையாக செலுத்தியவர்களுக்கு சிறப்பு சலுகை: மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை

கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை, வட்டியை முறையாக செலுத்தியவர்களுக்கு சிறப்பு சலுகை: மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை

கரோனா ஊரடங்கின்போது அரசு அறிவித்த 6 மாத சலுகை காலத்தில் கடன் தவணை, வட்டி உள்ளிட்டவற்றை சரியாக செலுத்தி யவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் தீவிர மாக பரிசீலித்து வருகிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில் பலர் வேலையை இழந்து தவித்த தால் அனைத்து வகையான வங்கிக் கடன்களுக்கும் தவணை, வட்டி செலுத்துவதற்கு 6 மாத சலுகையை ரிசர்வ் வங்கி அறி வித்திருந்தது. கரோனா பாதிப்பு குறையாத நிலையில், இந்த சலுகையை நீட்டிக்க வேண்டும். சலுகை காலத்தில் செலுத்த வேண் டிய வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ‘வட்டியை தள்ளுபடி செய் வது கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்ற அடிப்படை தன்மையை வெகுவாக சிதைத்துவிடும்.ஒழுங்காக கடனை திரும்ப செலுத்தியவர்களை அவமதிக்கும் செயல்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ‘இந்த காலகட்டத்தில் எத்தகைய சலுகையை அறிவிக்க அரசு விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என தெரிவித்ததுடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுடன் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்தாததால் ஏற்பட்ட வட்டி மீதான வட்டியை அரசு ஏற்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த விரிவான அறிக்கையை அக்டோபர் 5-ம் தேதி (இன்று) தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ.2 கோடிக்கும் குறைவான கடன் பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனி நபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், நுகர் வோர் கடன் உள்ளிட்ட கடன் பெற்ற வர்களுக்கு அரசு 6 மாத சலுகை அளித்தது. இந்த காலத்தில் செலுத்த வேண்டிய வட்டி மீதான வட்டியை ஏற்பதாக அரசு தெரி வித்திருந்தது.

கேஷ்-பேக் சலுகை

அரசின் அறிவிப்பு, கரோனா காலத்தில் கடன் தவணை சலு கையை பயன்படுத்தாமல் தவணை தொகையை செலுத்தியவர்களை அவமதிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் தவணை தொகையை செலுத்திய வர்களுக்கு கேஷ்-பேக் என்ற வகையில் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தவணை தொகையை திரும்ப செலுத்த அளிக்கப்பட்ட 6 மாத காலத்தில் அதற்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டிருந்தால் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அந்தத் தொகையை தவணையை திரும்ப செலுத்தியவர்களுக்கு அளிக்கலாம் என தெரிகிறது.

வட்டி மீதான வட்டி எவ்வளவு என்பது குறித்து வங்கிகள் கணக் கெடுத்து வருகின்றன. எவ்வளவு தொகை என்பது குறித்து திட்டவட்ட மான அளவீடு இன்னமும் கிடைக் கப் பெறவில்லை. மேலும் நிதி அமைச்சகம் அளித்துள்ள பரிந் துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகே எவ்வளவு கேஷ்-பேக் ஆபர் என்பது தெரியவரும்.

மாநில அரசுகள் விவசாயக் கடன் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்யும்போது, அது உண்மையாக ஒழுங்காக தவணையை திரும்ப செலுத்துவோரை வெகுவாக பாதிக்கும் என ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்திருந்தது. தற் போது அரசு வட்டி மீதான வட்டி சலுகையை ஏற்றுக்கொண்டால் அது ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை இருக் கும் என தகவல்கள் தெரிவிக் கின்றன. வங்கிகள் மற்றும் வங்கி யல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வட்டி மீதான வட்டியாக இந்த அளவுக்கு தொகையை அளிக்க வேண்டி யிருக்கும். ஆனால், பெரும் பாலான வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத் திக் கொண்டுள்ளனர். சில குறிப் பிடத்தக்க வாடிக்கையாளர்கள் குறைந்த காலம் இந்த சலு கையை பயன்படுத்திக் கொண்டுள் ளனர். எவ்வளவு பேர் சலுகையை பயன்படுத்திக் கொண்டனர், எவ் வளவு பேர் குறைந்த காலம் பயன்படுத்திக் கொண்டனர், எவ்வளவு பேர் சலுகை காலத் திலும் தவணையை ஒழுங்காக செலுத்தினர் என்பன போன்ற விவரங்களை தயாரிப்பது சற்று சிக்கலானது.

குறிப்பாக வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இத்தகைய கணக்கீடு களை திரட்டுவது சற்று சிரமமான பணியாகவும், சவாலானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிகளைப் பொறுத்தமட்டில் சாஃப்ட்வேரில் சிறிது மாற்றம் செய்தால் போதும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்