நிர்பயா வழக்கு: தூக்கிலிட உத்தரவு

நிர்பயா வழக்கு: தூக்கிலிட உத்தரவு

புதுடெல்லி:

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் கருணை மனுக்களை டெல்லி ஆளுநர் நிராகரித்துள்ளார்.

கடந்த 2012ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 6 பேரில் ஒருவன் மைனர் என்பதால் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டான். மேலும், முக்கிய குற்றவாளியான ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மீதமுள்ள பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 4 குற்றவாளிகளும் தங்களின் தூக்குத்தண்டனையை குறைக்குமாறு டெல்லி ஆளுநருகு கருணை மனு அளித்திருந்தனர். இந்த கருணை மனுவை ஆளுநர் இன்று நிராகரித்துள்ளார். மேலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற பரிந்துரை செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்