காத்திருக்கும் அடுத்த பேராபத்து

காத்திருக்கும் அடுத்த பேராபத்து

சீனாவின் வுஹானில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்கள் கழித்து, தற்போது மற்றொரு புதிய கொடிய வைரஸ் சீனாவில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரு ஆய்வின்படி, சீனாவில் பன்றிகளில் காணப்படும் இந்த புதிய வைரஸ் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் தொற்றுநோயாக மாறும் என கூறப்படுகறிது. இது ஒரு ‘தொற்று வைரஸ்’ என நிரூபிக்கக்கூடும் என்பதால் உன்னிப்பாக கவனிக்கப்பட விஷயமாக தற்போது உருமாறியுள்ளது. இருப்பினும், இந்த வைரஸில் இருந்து உடனடி ஆபத்து எதுவும் இதற்கு G4 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இதுபற்றி சீன பல்கலைக்கழக மற்றும் சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மைய விஞ்ஞானிகள் கூறுகையில், மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளும் புதிய வைரஸில் இருப்பதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சீனாவின் 10 மாகாணங்களில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் பன்றிகளில் இருந்து 30,000 சளி மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர்.
இவற்றின் மூலம் 179 பன்றி காய்ச்சல் வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதில் பெரும்பாலானவை புதிய வகையைச் சேர்ந்தவை. அதேசமயம் இவை 2016ஆம் ஆண்டில் இருந்து பன்றிகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெரட் எனப்படும் விலங்கின் மீது பல்வேறு பரிசோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
ஏனெனில் ப்ளூ போன்றவற்றின் பரிசோதனைகளில் இந்த வகை விலங்கே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு மனிதர்களைப் போன்றே காய்ச்சல், இருமல், தும்மல் ஆகியவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் மூலம் G4 வைரஸ் ஆனது எளிதில் தொற்றக் கூடியது. மேலும் மனிதர்களின் செல்களில் விரைவாக பெருக்கமடையக் கூடியவை.
இது பெரட் விலங்கில் வேறெந்த வைரஸும் ஏற்படுத்தாத மோசமான அறிகுறிகளை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது. ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்கு ஆன்டிபாடி உருவாகி நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்திருந்தாலும் G4 வைரஸை எதிர்க்கும் திறனை அளிக்காது என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரத்த பரிசோதனைகள் செய்து பார்க்கையில், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதற்கு எதிர்வினையாக ஆன்டிபாடிகள் உருவானவற்றில் 10.4 சதவீதம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஏற்கனவே ஆளானவர்கள் என்று தெரிகிறது. G4 வைரஸானது ஏற்கனவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கிறது. ஆனால் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வைரஸ் கடந்த 2009ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய H1N1-ல் இருந்து மரபு ரீதியாக மாற்றம் பெற்று காணப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்