புதிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி நாளை உரை

புதிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி நாளை உரை

புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி நாளை (ஆக.,01) மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நேற்று முன்தினம் (ஜூலை 29) மத்திய அரசு வெளியிட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, எம்.பில் படிப்புகள் ரத்து உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளில் இருந்து சில ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளும் வருகின்றன.இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி நாளை (ஆக.,01) மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானம் உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்