கேதர் ஜாதவ் அதிரடி நீக்கம்

  • In Sports
  • October 10, 2020
  • 254 Views
கேதர் ஜாதவ் அதிரடி நீக்கம்

கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்திருந்த சேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

மிடில் ஆர்டர் (அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ்/ ருத்துராஜ் கெய்க்வாட்)

அம்பத்தி ராயூடு தனது பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். அதே போல் தோனியும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அதே எதற்கு அணியில் இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாத அளவில் இருந்து வரும் கேதர் ஜாதவ் இன்றைய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட 20 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்கள் தோனி இன்றைய போட்டியிலும் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பை வழங்குவார் என்று தெரிவிக்கின்றன. ஒரு வேளை கேதர் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அவரை விட மிக மோசமாக கடந்த போட்டிகளில் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஆல் ரவுண்டர்கள் (டூவைன் பிராவோ, ஜடேஜா, சாம் கர்ரான்)

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு இன்றைய போட்டியிலும் மறுக்கப்படாது என்றே தெரிகிறது. சாம் கர்ரான் தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்து வருகிறார். டூவைன் பிராவோவும் இந்த போட்டியில் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

பந்துவீச்சாளர்கள் (ஷர்துல் தாகூர், கரண் சர்மா, தீபக் சாஹர்)

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாகூர் மற்றும் கரன் சர்மாவிற்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது. மற்றொரு பந்துவீச்சாளரான தீபக் சாஹர் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் பலமே.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்