கேல் ரத்னாவிற்கு நீரஜ் சோப்ரா பரிந்துரை

  • In Sports
  • May 31, 2020
  • 196 Views
கேல் ரத்னாவிற்கு நீரஜ் சோப்ரா பரிந்துரை

இந்திய தடகள சம்மேளனம் (ஏ.எஃப்.ஐ) அமைத்த குழு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நட்சத்திர ஈட்டி எரியும் வீரர் நீரஜ் சோப்ராவை சனிக்கிழமையன்று கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது.

22 வயதான நீரஜ் சோப்ரா இந்த ஆண்டிற்கான நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு இந்திய தடகள் சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடகள விளையாட்டு வீரர் ஆவார்.

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ராவுக்கு 2018ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதே ஆண்டில், அவர் கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு மீண்டும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்த ஆண்டு கேல் ரத்னாவுக்கான விருதுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடகள வீரர் நீரஜ் சோப்ரா மட்டுமே” என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேல் ரத்னா விருது ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் 7.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் (100மீ. மற்றும் 200மீ.) வென்ற முன்னணி ஓட்டப்பந்தய வீரர் டூட்டி சந்த், ஏற்கனவே ஒடிசா அரசாங்கத்தால் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

முழங்கை காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

காயம் காரணமாக நீரஜ் சோப்ரா 2019ஆம் ஆண்டு முழுவதும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்று 87.86மீ தூரம் ஈட்டி எறிந்து அவர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

கடந்த ஆண்டு முழுவதும் முழங்கை காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த நீரஜ் சோப்ரா, ஐ.ஏ.ஏ.எஃப் உலக சாம்பியன்ஷிப், டயமண்ட் லீக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார்.

அவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார், அப்போட்டியில் அவர் 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இதையடுத்து முழங்கை காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் 2019ஆம் ஆண்டு முழுவதும் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்