ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் அரசு தேர்வு இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி மலைக்கிராமமக்கள் போராட்டம்

ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் அரசு தேர்வு இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி மலைக்கிராமமக்கள் போராட்டம்

ஒசூர் அருகேயுள்ள கேரட்டி மலைக்கிராமத்தில் அரசு தேர்வு செய்து அடிக்கல் நாட்டிய இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வலியுறுத்தி மலைகிராமமக்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவில் உள்ள நாற்றாம்பாளையம் மற்றும் தோட்டமஞ்சு ஆகிய பஞ்சாயத்துகளில் வாழும் 16 ஆயிரம் மலைக்கிராமமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்துக் கொடுக்க முன்வந்தது. இதற்காக கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டிடத்திற்கான இடம் கேரட்டி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார மையத்தை கட்டினால் இரண்டு பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மலைக்கிராமமக்கள் அனைவரும் நம்பி இருந்தனர்.

இந்த நிலையில் நாட் றாம்பாளையம் பஞ்சாயத்தை அடுத்துள்ள பஞ்சல்துணை என்ற குக்கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதனை கண்டித்தும் அரசு தேர்வு செய்து அடிக்கல் நாட்டிய கேரட்டி கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் 20க்கும் மேற்பட்ட மலைகிராமமக்கள் சுமார் 500 பேர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ள இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக அரசு அரசு தேர்வு செய்த இடத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரட்டி மலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கேரட்டி கிராமம் மைய இடம் ஆனால் பஞ்சல்துணை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டினால் மலை கிராமங்களில் வாழும் மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்கும் இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவார்கள் இந்த மலைக்கிராமங்களில் சிசு மரணங்கள் மற்றும் வீட்டு பிரசவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது அதனை தவிர்க்க தூரத்தை குறைத்து கேரட்டி கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்