நடிகர் சங்கத்தேர்தல் செல்லாது; மீண்டும் தேர்தல்

  • In Cinema
  • January 24, 2020
  • 184 Views
நடிகர் சங்கத்தேர்தல் செல்லாது; மீண்டும் தேர்தல்

சென்னை:

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும், மீண்டும் தேர்தல் நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23ல் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குளறுபடி இருப்பதாகவும், தேர்தலை ரத்த செய்யக்கோரியும் நடிகர் சங்க உறுப்பினர் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கவும், பதிவான வாக்குகளை வங்கி லாக்கரில் வைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சங்கத்தின் நடவடிக்கைகளை கவனிக்க ஐஜி கீதாவை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து, நாசர், விஷால் மற்றும் கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அனைத்து வழக்குகளிலும் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பில், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகம் பதவிக்காலம் முடிவடைந்த பின் அறிவித்த தேர்தல் செல்லாது எனவும், நடிகர் சங்கத்திற்கு 3 மாதங்களுக்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்