துப்பாக்கிகளுடன் எம்எல்ஏ நடனம்..! வைரல் வீடியோ..!!

துப்பாக்கிகளுடன் எம்எல்ஏ நடனம்..! வைரல் வீடியோ..!!

உத்தரகண்ட்:

உத்தரகண்ட் எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கிகளுடன் நடமாடும் வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் பா.ஜ., எம்எல்ஏ.,வான பிரனவ், தன்னுடைய வீட்டில் நவீன துப்பாக்கிகளுடன் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த வீடியோவை பார்த்ததாகவும், பிரனவ் வைத்திருந்த துப்பாக்கிகள் லைசன்ஸ் பெற்றுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

சமூக வலைத்தளத்தில் பரவிய எம்எல்ஏ.,வின் இந்த வீடியோவால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்