மேள தாளத்துடன் அமைச்சர் நடனம்

மேள தாளத்துடன் அமைச்சர் நடனம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்ற அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், உற்சாகமாக நடனமாடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, செம்மேடு கிராமத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மேள தாளத்திற்கேற்ப அமைச்சர் கருப்பண்னன் உற்சாகமாக நடனமாடினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்