மாஸ்க் போடாமல் சுற்றிய பெண் தட்டிக்கேட்டதால் தகராறு

மாஸ்க் போடாமல் சுற்றிய பெண் தட்டிக்கேட்டதால் தகராறு

பொது இடங்களில் மாஸ்க் போடாமல் சுற்றி திரிந்த விவகாரத்தில், 19 வயது பெண் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் ஜூலை 3-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் இளம்பெண் இறந்த பின்னர் 11-ம் தேதியே வெளிச்சத்திற்கு வந்தது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் ரென்ட்டசின்தலா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பாத்திமா.. 19 வயதாகிறது.. ,இவர் அந்த பகுதியில் மாஸ்க் இல்லாமல் நடமாடி வந்துள்ளார்.

இதுகுறித்து, அவரது அம்மா அன்னாபுரெடியிடம் மல்லிகார்ஜுனா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.. மல்லிகார்ஜுனாவும், அவரது சகோதரரும் “உன் மகள் ஏன் மாஸ்க் போடாமல் சுற்றி திரிகிறார்” என்று பாத்திமா தந்தையிடம் இதற்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறதுஇப்போது 2வது முறையும் அந்த பெண் மாஸ்க் போடாததால், ஒரு கட்டத்தில் இது தகராறாகவும் மாறி, கைகலப்பாகவும் உருவெடுத்தது.. முடிவில் மல்லிகார்ஜுனா அவரது உறவினர்கள் சேர்ந்து பாத்திமாவின் தந்தை மற்றும் தாயை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர்.. இதை பார்த்து பதறிய பாத்திமா அவர்களை மீட்பதற்காக மல்லிகார்ஜுனாவையும், அவரது உறவினர்களையும் குறுக்கே சென்று தடுத்ததாக சொல்லப்படுகிறது.

அப்போதுதான், பாத்திமாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது… பலத்த காயத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அவர் குண்டூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாத்திமாவின் சடலத்தை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.. உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் இந்த மரணம் தொடர்பாக புகாரும் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் அன்னப்பு ரெட்டியையும், 4 நண்பர்களையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

இப்படிதான் 2 வாரத்துக்கு முன்பு, நெல்லூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியச் சொன்னதற்காக சுற்றுலாத்துறை ஊழியர் ஒருவர் தனது சக ஊழியரால் தாக்கியிருந்தார்.. இது 2வது சம்பவம் ஆகும்.. மாஸ்க் அணிய சொன்னதால், ஏற்படும் இந்த வன்முறைகளை நினைத்து மக்கள் கவலைக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்