தங்கம் வெல்வேன் என மேரிகோம் உறுதி

  • In Sports
  • May 28, 2020
  • 187 Views
தங்கம் வெல்வேன் என மேரிகோம் உறுதி

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையும், தேசிய முகாம்களிலும் வெளிநாட்டில் பயிற்சிப் பெற்றுவந்த மேரிகோம். தற்போது அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் கூறியதாவது:-

லாக் டவுனில் வீட்டிலேயே தனித்திருப்பது சிரமம் தான் என்றாலும், நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாற்போல் வீட்டில் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்திருப்பதால், உங்களுக்கு மேலும் ஒரு வயது கூடுதலாகிறதே, போட்டியில் பங்கேற்கும் சக்தி இருக்குமா என்று சிலா் என்னிடம் கேட்டதுண்டு, என்னுடைய உடல் தகுதி மற்றும் அனுபவத்தின் மீது நம்பிக்கை இருப்பதால், வயது கூடுவதை பற்றி நான் கவலைப்படவில்லை.தங்கம் வெல்வேன் என்ற உறுதி இருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்