4 ஆண்டுகளுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை

  • In Cinema
  • May 21, 2020
  • 179 Views
4 ஆண்டுகளுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை

தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் தான் லஷ்மிமேனன். முதல்படமே ஹிட் படமாக அமைய, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. கடைசியாக இவர் நடித்த றெக்க திரைப்படம் சரியாக ஓடாததால் நடிப்புக்கு இடைவெளி போட்டார். இந்த நிலையில் அவர் தனது படிப்பை மேற்கொள்ள போவதாக சொல்லி கொஞ்ச நாள் நடிப்பிற்கு முழுக்குப்போட்டார். இப்படியிருக்க 4 ஆண்டுகளுக்கு பிறகு ரீஎன்ட்ரி ஆகும் லக்ஷ்மி மேனன். தற்போது உடல் எடையை குறைத்து வேற லெவலில் திரும்பி வந்திருக்கிறார்.இந்த முறை மீண்டும் கும்கி 2 படத்தில் அவருடன் நடித்த விக்ரம் பிரபுவுடன் நடிக்க போகிறார். இயக்குனர் சுசீந்திரன் இதனை இயக்குகிறார்.இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். இதனிடையே , தன்னுடைய முதுகில் டாட்டு குத்தியுள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் லஷ்மிமேனன்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்