ஏரி குடிமராமத்து பணி

ஏரி குடிமராமத்து பணி

ஒசூர்:

ஓசூர் அருகே, மைனா நிறுவனம் திட்டத்தின் கீழ் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஏரி குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சென்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது.

தமிழக அரசு மழைநீரை சேமிக்க மேற்க்கொண்டு வரும் குடிமராமத்து பணிகள் பலரிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஓசூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமும் தமிழக அரசின் திட்டத்தை வரவேற்று, சென்னத்தூர் ஏரியை குடிமராமத்து செய்திட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர்.

இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுமதி வழங்கியதையடுத்து ஏரியை நேரில் பார்வையிட்டு பூஜை செய்து குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்