காஷ்மீரை விட்டு குலாம் நபி வெளியேற உத்தரவு

காஷ்மீரை விட்டு குலாம் நபி வெளியேற உத்தரவு

டெல்லி:
பணம் கொடுத்தால் அனைவரும் உங்களுடன் வந்து நடிப்பார்கள் என அஜித் தோவல், காஷ்மீர் மக்களுடன் உணவு சாப்பிட்டதை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம் செய்துள்ளார்.

இதனையடுத்து குலாம்நபி ஆசாத் காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் நிலவரங்கள் பற்றி நேரில் ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியான் பகுதி மக்கள் சிலருடன் உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

எல்லாம் சரியாக செல்வதாகவும், உங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பு எனவும் உள்ளூர் மக்களிடம் தோவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், பணம் கொடுத்து யாரை வேண்டுமானாலும் உங்களுடன் சாப்பிட வைக்கலாம் என்றார்.

370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் சிலரிடம் பணம் கொடுத்து நடிக்க வைத்து, மத்திய அரசு இந்த வீடியோவை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கிடையே காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குலாம் நபி. உடனே காஷ்மீரை விட்டு வெளியேற பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்