நானே கூத்தாடி பணமில்லாமல் அல்லாடி வருகிறேன் – கருணாஸ்

  • In Cinema
  • June 14, 2020
  • 204 Views
நானே கூத்தாடி பணமில்லாமல் அல்லாடி வருகிறேன் – கருணாஸ்

நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் கருணாஸ் தனது திருவதானி தொகுதியில் ஏரி குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், தான் பணமில்லாது கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” ரூ.15 இலட்சம் மதிப்பில் திரைத்துறையை சார்ந்த நலிவடைந்த பணியாளர்களுக்கு உதவி செய்துள்ளான். மக்களுக்கு அரசு சார்பாக தேவையான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

பிற கட்சியை சார்ந்த நபர்கள் போல எனக்கு வேறு தொழில்கள் கிடையாது.. மணல் குவாரி, கல் குவாரி, இரண்டாம்கட்ட தொழில்கள் போன்றவை கிடையாது. நான் ஒரு கூத்தாடி. என்னிடம் தற்போது பணம் இல்லைடநானே பணமில்லாது மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். பிக் பாஸ் ரித்விகாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளான். படப்பிடிப்பு அனுமதி வந்தவுடன் நடிக்க சென்றுவிடுவேன் ” என்று கூறினார்.

சில வருடத்திற்கு முன்னதாக நாளொன்றுக்கு மதுபானம் அருந்த ரூ.1 இலட்சம் செலவு செய்வதாக பரபரப்பு பேச்சு பேசியிருந்த கொடை வள்ளல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்