கர்நாடகவில் கனமழை.. 48 பேர் உயிரிழப்பு

கர்நாடகவில் கனமழை.. 48 பேர் உயிரிழப்பு

பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் 48 பேர் பலியானதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலகாவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த மழையால், அந்த மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் மிதக்கிறது.

தற்போது பெலகாவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் வடகர்நாடக மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மழை தற்போது நின்றுள்ளது. ஆனாலும் வடகர்நாடகாவில் இன்னும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல கிராமங்கள் இருளிலும் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர். தங்களின் சொந்த வீடுகளுக்கு மக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ படைவீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்