மீனவர் வலையில் சிக்கி ராக்கெட்

மீனவர் வலையில் சிக்கி ராக்கெட்

புதுச்சேரி:

புதுச்சேரியில் மீனவர் ஒருவரின் வலையில் இஸ்ரோவின் ராக்கெட் பூஸ்டர் சிக்கியுள்ளது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர் சிவசங்கரன், வழக்கம்போல் நேற்று கடலுக்கு மீன் பிடித்துள்ளார். அப்போது, அதிக எடையுடன் கூடிய மர்ம பொருள் சிக்கியுள்ளதை உணர்ந்துள்ளார்.

பின்னர் இழுக்க முடியாமல் ஜெசிபி இயந்திரத்தைக்கொண்டு அதனை வெளியே இழுத்துள்ளனர். அப்போது அது ராக்கெட் பூஸ்டர் என தெரியவந்துள்ளது.

சிவப்பு நிறத்தில் ‘பிஎஸ்ஓஎம் எக்ஸ்எல்’ என பொறிக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட் பூஸ்டர், சுமார் 30 அடி நீளம் கொண்டது. இதன் விட்டம் சுமார் மூன்று அடி. இதன் எடை பல டன் இருக்கும் என தெரியவந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மீட்டுச் சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்