ஊரடங்கில் 10.18 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல்

ஊரடங்கில் 10.18 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல்

கொரோனா ஊரடங்கின் போது அஞ்சல் துறையில் புதியதாக 10.18 லட்சம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.6 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 10.18 லட்சம் புதிய ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.138.16 கோடி மதிப்பிலான 15.84 லட்சம் நேரடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. ₹724 கோடி மதிப்பிலான 15.98 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5.92 லட்சம் ஐபிபிபி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.45 கோடி மதிப்பிலான கோவிட் 19 நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏஇபிஎஸ் ஆதார் சார்ந்த பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு ரூ.1.35 கோடியாக உள்ளது. இதேபோல், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவித்தொகைகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்